மேகம்

மனதில் இடியும் மின்னல்களும் மேகத்தை போல்

மேகம் மனமிரங்கி மழை பெய்து குளிர்வித்தது

மண்ணையும் மனதையும்

வானம்

வஞ்சனையின்றி வர்ணஜாலம் காட்டும் வானம்

இந்த வஞ்சியின் நெஞ்சத்தைக்

கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது

முரண்

மாலை நேர உடற்பயிற்சி

நடைபாதையில் பாதங்கள் நடந்தன...

என் மனதில்

எண்ணங்கள் ஓடின...

கவிதை

*க*ண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும்

*வி*னோத எண்ணங்களையும்

*தை*ப்பதோ

க வி தை?

மயக்கம்

மயங்கியது மனம்

தேன் பாயும் இசையிற்கா

தேன் சிந்தும் மலரின் மணத்திற்கா?

 

அழகி

உன்னழகைக்கண்டு

வெட்கத்தில் முகம் மூட வெண்மேகத்திரையில்லை

வெண்ணிலாவின் வருத்தம்

வேகத்தடை

மழை மிதிவண்டி

மனப்போராட்டம்

மழையில் கரைய மாட்டாய்

முரளியின் முரண்

மிதித்தேன் மிதிவண்டியை

வேகத் தடை மிதிவண்டிக்கு

என் மகிழ்ச்சிக்கு இல்லை

இளங்காலை

வான்கடலில் மேக அலைகளுக்குள்

கண்ணாமூச்சியாடும் காலைக்கதிரவன்

வாய்ப்புகள்

விமானம் வானத்தில் பறந்தால் வேகமாய் அண்ணாந்து பார்க்கும்

கண்ணில் மணலைக் கண்டால் மறு நிமிடம் கைகள் கோலம் போடும்

குட்டைத் தண்ணீரில் கால்கள் குதித்து ஆடும்

கையில் வழியும் கோன் ஐஸ்கிரீமை வெட்கமின்றி நக்கி சாப்பிடும்

சிறுப்பிள்ளையாய் மாறுவேனோ

வாய்ப்புகளை விடாமல் வசப்படுத்திக்கொள்ள

பூர்ண சந்திர கிரகணம்

தண்ணிலவுக்கு பூமியின் மேல் எத்தனைக் கோபம்

முகம் சிவந்தது

பூர்ண சந்திர கிரகணம்

இரவு நடை

மெல்லிய இரவில் மெது நடை

ஒற்றையில் முடியுமா

மனதில் குழப்பம்

பொய்யாக்கின பூக்களின் நறுமணம்

இசை

எத்தனை ஆழம் மூழ்கினாலும் மூச்சுத் திணறாது

இசை வெள்ளம்

நட்பு

சூரியன் தேவை இல்லை

நினைத்தால் போதும்

என் இதழ்கள் விரியும்

நட்பூ (பு)

 

மாயக்காரி

நிலவே என்ன மாயம் செய்தாய்

சுட்டெரிக்கும் சூரியனிடம் கடனாளி

ஆனால் தருவதோ

தண்ணொளி

தாளம்

கார்மேகம் யாரிடம் இசை பயிண்றது

என் காதில் பாயும் இசைக்குத் தாளம் தப்பாமல்

தூறல் போடுகிறதே!

நீலக்குறிஞ்சி

நீலக்குறிஞ்சியின் அழகில் நெஞ்சம் மயங்கியது

கவிதை புனைய மனம் கெஞ்சியது

அஞ்சியது…

எனை பார்த்து சிரித்தது குறிஞ்சி

“நானே ஒரு கவிதை”

பார்வை

காணும் காட்சியில் எத்தனை பொய்கள்

ஊடுருவிப்பார்த்தால் உண்மையின் உக்கிரம் கண்ணைக் கூசுகிறது

கண் மூடி மனம் மறுபடியும் பொய்யை நம்பக் கெஞ்சுகிறது

வறட்சி

ஓ(இ)சையில்லை

மூங்கிலிலும் மேகங்களிலும்

வறண்டது

மனமும் மண்ணும்

பயணம்

சில நிமிடப் பயணம்

பல மணி நேரப்பயணம்

சில நாள் பயணம்

பல வாரப் பயணம்

சில மாதப்பயணம்

பல வருடப்பயணம்

எண்ணங்கள் செய்யும் பயணம் எண்ணிலடங்காது

பயணங்கள் முடிவதில்லை

அனுபவங்கள் அலுப்பதில்லை

பருப்பு தீர்ந்து விட்டது

அம்மாவின் பயணம் பலசரக்கு கடை

படித்து முன்னேற வேண்டும்

மாணவர்களின் பயணம் பள்ளிக்கூடம்

பந்தலிட்டு பந்திவிரித்து பாந்தமாய்க் கல்யாணம்

சொந்த பந்தங்களின் பயணம் கல்யாண மண்டபம்

குடும்பத்தைக் காக்க குழந்தைகள் படிக்க தாய் தந்தை பேண நம் பயணம் அலுவலகம்

பரபரப்பு வாழ்க்கை பலவிதப் பயணம்

அது முடியும்போது தொடங்கும் நம் மெய்ப்(யான) பயணம்

கள்ளி

கண்ணால் பார்த்தால் கிடைக்கும் சுகம்               

கை பட்டால் பார்க்கும் பதம்

அட(டி)க் கள்ளியே!

ஏக்கங்கள்

வெயிற் காலத்தில் மழைக்கு ஏங்கும்

கார் காலத்தில் கதிரவனை எதிர்பார்க்கும்

மனிதா...

வெயிலில் விதையாகு!

மழையில் துளிர்த்திடு!

நிகழ் கால நிதர்சனத்தை ஏற்றுக் கொள்

யோகக் கலை

மனதைக் கட்டுப்படுத்த யோகக்கலை

மரம் புதர்களுக்குமா?

வெட்டிச்சீரமைக்கப்பட்ட நகரச்செடிகொடிகள்

 

    சௌம்யா

About the Author: Sowmya lives in Singapore with her family. She holds a Master’s degree and works as a teacher. She has wide range of interests which also includes composing Tamil Kavithaigal.

 

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *