ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் – சௌம்யா

ஜடப்பொருட்கள் வாங்கும் பொழுது நிறத்தில் பேதம் பார்க்காத நீ அரிதான பிறப்பான மானிடப் பிறப்பில் நிற பேதம் பார்த்ததேன் ஒரே ஒரு முறை சுவாசிக்கத்தானே அவன் கேட்டான் உன் சொத்தையா கேட்டான் சுவாசித்தல் இயற்கையின் நியதி சுவாசித்தல் அவன் பிறப்புரிமை அதை மறுத்தது உன் கீழ்மை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தது ஒரு கூட்டம் அவற்றை மனிதன் என்று கூறுவதில் பெறும் வெட்கம் தன் இனத்திற்கு தீங்கு என்றால் கொதித்து எழும் விலங்கினம் உன் சதை கூட ஆட மறுத்ததே மனிதனே நீ ஈனம் உன் குருதியுன் சிவப்பு தான் அவன் குருதியும் சிவப்பு தான் அகத்துனுள் உறையும்

 

கவிதை தொகுப்பு – 2 – சௌம்யா

சின்னச் சின்ன சந்தோஷங்கள் அதிகாலை அமைதியில் அவசரமின்றி அமர்ந்து ஆற அமர குடிக்கும் சூடான காபி  எட்டு மணி பள்ளிக்கு எட்டி நடை போட்டு பள்ளியை எட்டியவுடன் வந்து கட்டிக்கொள்ளும் குட்டித்தங்கங்கள்  இரவுச்சாப்பாட்டுக்கு பனீர் பட்டர் மசாலா அறிந்தவுடன் என் பருவ மகன் முகத்தில் படரும் வெட்கம் கலந்த புன்னகை  காலை மாலை நேரம் பாராமல் கைத்தொலைபேசியில் கூப்பிட்டவுடன் என் அம்மாவின் கனிவான “சொல்லுடி சௌம்யா..”  காலை உணவை வாயில் அள்ளிப்போட்டு கைப்பையும் கணினிப்பையுமாய் காரில் ஏறி கிடைக்கும் பதினந்து நிமிடப் பயணத்தில் கொஞ்சமாய் பேசும் கணவனுடன் நெஞ்சாரக் கதைக்கும் குட்டிக் கதைகள்  இதமான இரவில் இயற்கையோடு கை

 

கவிதை தொகுப்பு – 1 – சௌம்யா

மேகம் மனதில் இடியும் மின்னல்களும் மேகத்தை போல் மேகம் மனமிரங்கி மழை பெய்து குளிர்வித்தது மண்ணையும் மனதையும் வானம் வஞ்சனையின்றி வர்ணஜாலம் காட்டும் வானம் இந்த வஞ்சியின் நெஞ்சத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கிறது முரண் மாலை நேர உடற்பயிற்சி நடைபாதையில் பாதங்கள் நடந்தன… என் மனதில் எண்ணங்கள் ஓடின… கவிதை *க*ண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் *வி*னோத எண்ணங்களையும் *தை*ப்பதோ க வி தை? மயக்கம் மயங்கியது மனம் தேன் பாயும் இசையிற்கா தேன் சிந்தும் மலரின் மணத்திற்கா?   அழகி உன்னழகைக்கண்டு வெட்கத்தில் முகம் மூட வெண்மேகத்திரையில்லை வெண்ணிலாவின் வருத்தம் வேகத்தடை மழை மிதிவண்டி மனப்போராட்டம் மழையில்