கவிதை தொகுப்பு – 2 – சௌம்யா
சின்னச் சின்ன சந்தோஷங்கள் அதிகாலை அமைதியில் அவசரமின்றி அமர்ந்து ஆற அமர குடிக்கும் சூடான காபி எட்டு மணி பள்ளிக்கு எட்டி நடை போட்டு பள்ளியை எட்டியவுடன் வந்து கட்டிக்கொள்ளும் குட்டித்தங்கங்கள் இரவுச்சாப்பாட்டுக்கு பனீர் பட்டர் மசாலா அறிந்தவுடன் என் பருவ மகன் முகத்தில் படரும் வெட்கம் கலந்த புன்னகை காலை மாலை நேரம் பாராமல் கைத்தொலைபேசியில் கூப்பிட்டவுடன் என் அம்மாவின் கனிவான “சொல்லுடி சௌம்யா..” காலை உணவை வாயில் அள்ளிப்போட்டு கைப்பையும் கணினிப்பையுமாய் காரில் ஏறி கிடைக்கும் பதினந்து நிமிடப் பயணத்தில் கொஞ்சமாய் பேசும் கணவனுடன் நெஞ்சாரக் கதைக்கும் குட்டிக் கதைகள் இதமான இரவில் இயற்கையோடு கை