ஜடப்பொருட்கள் வாங்கும் பொழுது நிறத்தில் பேதம் பார்க்காத நீ

அரிதான பிறப்பான மானிடப் பிறப்பில் நிற பேதம் பார்த்ததேன்

ஒரே ஒரு முறை சுவாசிக்கத்தானே அவன் கேட்டான்

உன் சொத்தையா கேட்டான்

சுவாசித்தல் இயற்கையின் நியதி

சுவாசித்தல் அவன் பிறப்புரிமை

அதை மறுத்தது உன் கீழ்மை

சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தது ஒரு கூட்டம்

அவற்றை மனிதன் என்று கூறுவதில் பெறும் வெட்கம்

தன் இனத்திற்கு தீங்கு என்றால் கொதித்து எழும் விலங்கினம்

உன் சதை கூட ஆட மறுத்ததே மனிதனே நீ ஈனம்

உன் குருதியுன் சிவப்பு தான் அவன் குருதியும் சிவப்பு தான்

அகத்துனுள் உறையும் ஆன்மாவைப் போற்றாமல்

அகங்காரம் உன் கண்ணை மறைத்தால்

அழியும் உன் இனமும் தான்

– சௌம்யா

 

1 Comment

  1. This incident is more of crude behavior of cop not cruel. It’s an accident more to blame the general attitude of law enforcement in usa.
    If you threaten to shot a cop with toy gun, he might shoot you.
    Differentiating among us is a strategy. Color/race/caste/money is a tool.
    Tool will evolve but strategy will not change that is survival instinct.

    Evolution in Indian cities
    60/70 to 80/90s – isolation of families within immediate family
    80/90 to 90/00s – isolation of families within same complex
    90/00 to 10/20 – isolation of family members
    This is more threatening.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *