ஒரே ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன் – சௌம்யா
ஜடப்பொருட்கள் வாங்கும் பொழுது நிறத்தில் பேதம் பார்க்காத நீ அரிதான பிறப்பான மானிடப் பிறப்பில் நிற பேதம் பார்த்ததேன் ஒரே ஒரு முறை சுவாசிக்கத்தானே அவன் கேட்டான் உன் சொத்தையா கேட்டான் சுவாசித்தல் இயற்கையின் நியதி சுவாசித்தல் அவன் பிறப்புரிமை அதை மறுத்தது உன் கீழ்மை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தது ஒரு கூட்டம் அவற்றை மனிதன் என்று கூறுவதில் பெறும் வெட்கம் தன் இனத்திற்கு தீங்கு என்றால் கொதித்து எழும் விலங்கினம் உன் சதை கூட ஆட மறுத்ததே மனிதனே நீ ஈனம் உன் குருதியுன் சிவப்பு தான் அவன் குருதியும் சிவப்பு தான் அகத்துனுள் உறையும்